சாதிவாரி கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!
supreme court orders bihar govt to respond in 4 weeks in caste wise census
பிகார் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 1 சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சாதகமாக பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் விசாரணையை 2024-ம் ஆண்டு ஜனவரிக்கு பட்டியலிட்டு உத்தரவுவிட்டுள்ளது. மேலும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு பிகார் அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், கணக்கெடுப்புக்கான விவரங்களைச் சேகரிப்பதில் சரியான வழிமுறை பின்பற்றவில்லை எதுவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது .
மேலும் கணக்கெடுப்பின் தகவல்களை வெளியிட்டு பிகார் அரசு உச்ச நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறியுள்ளது. கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை நிராகரித்த உச்சநீதி மன்றம் எதையும் நிறுத்த முடியாது எனவும் , எந்த அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதில் நாங்கள் தலையிட முடியாது எனவும், அது தவறாக முடியும் எனவும் என்று உச்ச நீதிமன்றம் தெரித்துள்ளது.
மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் தனியுரிமை மீறப்பட்டிருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவறானது எனவும் வாதிட்ட்டார். அதற்கு "எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதனால் தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்ற வாதம் தவறானது" உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை 2024ம் ஆண்டு ஜனவரிக்கு பட்டியலிட்டு உத்தரவுவிட்டுள்ளது.
English Summary
supreme court orders bihar govt to respond in 4 weeks in caste wise census