வழக்கறிஞர் அலுவலகத்தில் நடக்கும் திருமணங்கள் செல்லும்! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூரில் ஒரு பெண்ணை வழக்கறிஞர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்து திருமண சட்டத்தின் படி வழக்கறிஞர்கள் முன்பு நடைபெற்ற திருமணம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. அதேபோன்று திருமணம் நடத்தி வைத்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதேபோன்று வேறு ஏதேனும் திருமணம் நடைபெற்று இருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்குமாறு உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து இளவரசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இளவரசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரு இந்துக்கள் உறவினர்கள், நண்பர்கள், மூன்றாவது நபர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டால் செல்லும் என இந்து திருமண சட்டம் கூறுகிறது என வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு,  வழக்கறிஞர்கள் தொழில் முறையில் இல்லாமல தனிப்பட்ட முறையில் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்களை செய்யலாம் என பரபரப்பு தீர்ப்பை தீர்ப்பு வழங்கியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SupremeCourt verdict that marriage held in lawyer office is valid


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->