சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி கேட்கவில்லை- மத்திய அரசு பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பணிகள் தமிழக அரசு முன்னெடுப்பில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் எழுப்பிய கேள்விக்கு, விட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி மனோகர்லால் கட்டா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மந்திரி கூறுகையில், மத்திய அரசு ரூ.63,246 கோடி செலவில் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கான ஒப்புதலை அளித்தது என தெரிவித்தார்.

எனினும், இதுவரை சென்னை மெட்ரோ நிறுவனம் மத்திய நிதி உதவி குறித்த எந்தவித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.

தமிழக அரசு சமீபத்தில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இந்த அறிக்கைகளை மத்திய அரசு ஆய்வு செய்து, திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறினார்.மேலும், மதுரை-கோவை மெட்ரோ திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பல மாநிலங்களில் பல நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் சென்னியைத் தவிர மற்ற நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வரவிருக்கும் பாராளுமன்ற பட்ஜெட்டில் மதுரை-கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிலில் தமிழக அரசு மெட்ரோ ரெயில் திட்டங்களை விரைவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu government did not ask for funding for the Chennai Metro Rail project central government sensational information


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->