9 ஐபிஸ் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெற்ற நிலையில், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதைத் தொடர்ந்து, கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையிட ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த வெங்கடராமன் கூடுதலாக நிர்வாக பிரிவை கவனிப்பார். அதேபோல், போலீஸ் பயிற்சி அகாடமியின் டிஜிபி பதவியை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதலாக கனிப்பார். 

இதையடுத்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணன், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், கோவை போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அசோக் குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 

மேலும், நாகை கடலோர காவல்படை எஸ்.பி செந்தில்குமார், தமிழ்நாடு கமாண்டோ படைக்கும், தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பியாக இருந்த ராமர், நாகை கடலோர காவல்படை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government order to nine ips officers change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->