எல்ஐசி நிறுவனத்திற்கு நோடீஸ் - வரித்துறை அதிரடி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவை மற்றும் வட்டி தொகை 806 கோடி ரூபாய் செலுத்துமாறு மும்பை மாநில வரித்துறை துணை ஆணையர் சார்பில் எல்ஐசி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த நோடீஸில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் அபராதத்துடன் 806 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரித்துறை அனுப்பிய இந்த நோட்டீஸால் எல்ஐசியின் செயல்பாடு மற்றும் பண பரிவர்த்தனைகளின் செயல்பாடு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லையென்று எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 2023ல், 4,993 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வரி தகராறுகளில் காப்பீட்டாளருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து எல்ஐசி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tax department send notice to lic company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->