5 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கோவிந்தனுக்கு 79 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal



கேரளா : தளிப்பரம்பு பகுதியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் படிக்கும் 5 மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2013-ம் ஆண்டு புகார் எழுந்தது.

பெரிங்கோம் ஆலப்பாடத்தை சேர்ந்த கோவிந்தன் என்ற ஆசிரியர் தான், 5 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணை முடிவில், தொடர்ந்து 8 மாதங்கள் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

இதனையடுத்து ஆசிரியர் கோவிந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் கோவிந்தனுக்கு 79 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.70 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher harassment 5 minor girl students case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->