ஆடையில் மலம் கழித்த சிறுவன்.. கொதிக்கும் நீரை ஊற்றிய கொடூர ஆசிரியர்..! - Seithipunal
Seithipunal


ஆடையில் மலம் கழித்ததால் ஆசிரியை சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறும்பு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்து நல்வழிப்படுத்துவர். ஆனால், தப்பு செய்தால் கண்டிப்பதை விட்டு விட்டு சில கொடூர ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்துவதௌயும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆடையில் மலம் கழித்ததால் சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம்  அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம், ரெய்ச்சூர் மாவட்டதில் உள்ள சந்தேகநல்லூர் பகுதியில் தொடக்க பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில், ஹலிகெப்பா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அங்கு படித்து வந்த 2ம் வகுப்பு சிறுவன் ஒருவன் தனது ஆடையில் மலம் கழித்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த அவர் அந்த சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார்.

காயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.கடந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து தெரிவித்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம், ஆனால், இதுவரை புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பள்ளிகல்வுதுறைக்கு கீழ் வருவதால் அங்கிருந்து தான் புகார் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher poured Hot water on 7 years old boy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->