பள்ளி மாணவிகளின் மேல் சட்டையை அவிழ்த்துவிட்டு அனுப்பிய தலைமை ஆசிரியர் - ஜார்கண்டில் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்டம் திக்வாடியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது.

தற்போது அனைத்து தேர்வுகளும் நிறைவு பெற்றதால் மகிழ்ச்சியில் வெளியே வந்த மாணவிகள் சிலர், தங்களது தோழிகளின் சட்டைகளில் பெயர் மற்றும் சில வாசகங்களை எழுதினர்.

இதைப்பார்த்த அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், அவர்களை அழைத்து கண்டித்ததுடன் அவர்களின் சட்டைகளை களைந்துவிட்டு வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இப்படி சுமார் 80 மாணவிகள் தங்களது மேல் சட்டைகள் இன்றி தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

இருப்பினும் பெற்றோர்கள் சமாதானம் அடையாமல், முதல்வர் மீது போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher punishment remove school students uniform in jarkhand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->