100 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி! பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் பதவியேற்ற 100 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

அம்மாநில மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரத ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சதி செய்வதாக தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா டி.ஜி.பி.யிடம், அம்மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் புன்னா கைலாஷ், சாருக் கொண்டா, மதுசூதன் ரெட்டி கொடுத்துள்ள புகார் மனுவில், "பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி, பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று பொதுவெளியில் பேசியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 100 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Assembly Election Congress Revanth Reddy 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->