கோடிக்கணக்கில் சொத்து: வசமாக சிக்கிய பெண் தாசில்தார்! தெலுங்கானாவில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, கரீம்நகர் ஜமீன் குண்டா மண்டல தாசில்தார் மற்றும் இணைப்பதிவாளரான மார்கலா ரஜனி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீடு மற்றும் உறவினர்கள் கூட்டாளி மற்றும் பினாமி என சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.5 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் ரூ. 25.70 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து 1462 கிராம் எடை கொண்ட தங்க ஆபரணங்கள், ரூ. 9 லட்சம் மதிப்பிலான வீட்டு பொருட்கள், ரூ. 31 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்ட வாகனங்கள், 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ. 21 லட்சம் மதிப்பிலான 22 வீட்டு மனை ஆவணங்கள் என சுமார் ரூ. 3.2 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் லஞ்சம் வாங்கி குவிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana ed raid issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->