தெலுங்கானா துப்பாக்கிச் சூடு! 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை! போலீசார் 2 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


போலீசார் நடத்திய என்கவுண்டரில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுலம் வனப்பகுதியில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் அங்கு பதுங்கி உள்ளதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து, அக்காட்டு பகுதியில் போலீஸ் அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது மாவோயிஸ்ட்கள் மறைந்திருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனை தொடர்ந்து, மாவோயிஸ்ட்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அவர்கள் மீது போலீசாரும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கி சூடு நடத்தியதில், 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் இரண்டு பெண்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் போலீசார் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana firing 6 Maoists shot dead 2 policemen seriously injured


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->