ஒய்.எஸ் ஷர்மிளாவை காரோடு இழுத்துச் சென்ற தெலுங்கானா போலீஸ்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதலமைச்சர் தலைவர் ஆன ஒய்.எஸ் ஷர்மிளாவை அவர் அமர்ந்திருந்த காரோடு தெலுங்கானா போலீசார் கிரேன் மூலம் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு புதிய கட்சி தொடங்கிய சர்மிளா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு எதிராக மாநில முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாதயாத்திரையின் போது சந்திரசேகர ராவ் கட்சியின் தொண்டர்களுக்கும் சர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தெலுங்கானா போலீசார் ஷர்மிளாவை கைது செய்து பின்னர் விடுவித்தனர். அதேபோன்று இன்று காலை ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியினர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இல்லம் அமைந்துள்ள பிரகதி பவன் நோக்கி பேரணி சென்றனர்.

இந்த பேரணியில் ஷர்மிளாவும் கலந்து கொண்டார். இந்த பேரணியில் கார் மூலம் வந்து கொண்டிருந்த ஷர்மிளாவை தடுத்து தெலுங்கானா போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் ஷர்மிளா காரில் இருந்து இறங்காததால் அந்த காரை போலீசார் கிரேன் மூலம் கட்டி இழுத்துச் சென்றனர். 

இதனால் போலீசாருக்கும் ஷர்மிளாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஷர்மிளாவின் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana police dragged YSR Sharmila with her car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->