கர்ப்பிணி பெண்ணின் வாயில் ஆசிட்டை ஊற்றி கொலை செய்த கொடூரன்.!  - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டா பகுதியை சேர்ந்தவர் தருண் (வயது 34). இவரது மனைவி கல்யாணி (வயது 30). இருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணமான நாளிலிருந்து தருணும், அவரது குடும்பத்தினரும் கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தருண் கல்யாணியை அடித்து, கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனை முதலில் மறுத்த கல்யாணி, கணவனின் கொடுமை தாங்காமல் ஆசிட்டை குடித்துள்ளார். வாய் மற்றும் குடல் வெந்த நிலையில், வலியால் அலறி துடித்தார். பின்னர், தருண் அங்கிருந்து தப்பி ஓடினார்.

சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று கல்யாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து, கல்யாணியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana pregnant lady acids husband arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->