நம் பக்கத்து மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்! 30 கிலோமீட்டர் ஆழம்! பதறிய மக்கள்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, வாரங்கல் பகுதியில் இன்று 4.43 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வாரங்கல் கிழக்கு பகுதி 127 கிலோமீட்டர் தொலைவில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் லேசான அளவில் பதிவானதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் மக்கள் சற்று அச்சமடைந்துள்ளனர். 

நிலநடுக்க தேசிய மையம், 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, ''நிலநடுக்கம் ஏற்படும் போது அமைதியாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். நிகழ்வின் போது பாதுகாப்பான இடத்தை எப்போதும் தேட வேண்டும். வீட்டிற்குள் இருப்பவர்கள் மேசை அல்லது படுகைக்கு அடியில் சென்று கண்ணாடி, ஜன்னல் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். 

கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியே செல்ல அவசரப்பட கூடாது. வீட்டை விட்டு வெளியில் இருந்தால் கட்டிடங்கள் மற்றும் கம்பிகளை விட்டு சற்று விலகி இருக்க வேண்டும். 

வாகனங்களை ஓட்டிக் கொண்டிருந்தால் உடனடியாக அதனை நிறுத்தி விட வேண்டும். நிலநடுக்க அதிர்வுகள் நிற்கும் வரை திறந்தவெளியில் இருக்க வேண்டும்'' என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana sudden earthquake 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->