தெலுங்கு தேச கட்சி பிரமுகர் மீது வழக்கு- அமைச்சர் ரோஜா காட்டம்! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, ''சி.ஐ.டி சந்திரபாபு நாயுடுவை கைது செய்த பிறகு தெலுங்கு தேச கட்சியினர் யாரைக் கொல்லலாம் என யோசித்து வருகின்றனர். 

சந்திரபாபு நாயுடுவை டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வந்தாலும் வெளியே கொண்டு வர முடியாது. தொகுதியிலும் வீட்டிலும் உள்ள பெண்களிடம் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி எப்படி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரியவந்துள்ளது. 

வரலாற்றில் பெண்களை இழிவு படுத்தி பேசுவது என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவு படுத்தி பேசி ஒரு வாரம் ஆகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். 

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் சகோத் பல பதக்கங்களை வென்றாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்குவிக்கவில்லை. உதவித்தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார். 

ஆனால் ஜாதி, மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பதக்கம் வென்ற வீரரை ஊக்குவித்து வருகிறார். 

மேலும் அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telugu Desam Party leader against Case Minister Roja 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->