கோவில் உண்டியலை உடைத்த திருடனின்.. மண்டையை உடைத்த பாதுகாவலர்.! பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத் பகுதியில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையனை கோவில் பாதுகாவலர் தாக்கியதில் உயிரிழந்துள்ளான். 

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஹைதராபாத் அருகே வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரங்கையா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று ரங்கையா கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது குஷாய்குடா பகுதியைச் சேர்ந்த கட்டம் ராஜு என்ற திருடன் அந்த கோவிலுக்கு கொள்ளை அடிக்க வந்துள்ளான். அந்த கோவிலில் இருந்த உண்டியலை உடைத்த போது சத்தம் எழுந்தது.

இந்த சத்தத்தை கேட்டு ரங்கையா ஓடிவந்த போது திருடனை தடுக்க முயற்சித்தார். இதனால் ராஜூ மற்றும் ரங்கையா இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில், தற்காப்புக்காக தங்கையா கட்டையை எடுத்து ராஜுவின் தலையில் தாக்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana Temple security attack and killed Thief 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->