திருப்பதி தேவஸ்தான செல்போன் செயலி -  24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உலக புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

அதற்காக தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், திருப்பதி தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து நேற்று முன்தினம் ttd devasthanam mobile app எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் தங்களது தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை பக்தர்கள் தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலம் அனைத்து முன்பதிவு தரிசனம், தங்குமிடம் முன்பதிவு, குலுக்கல் முறை தரிசனம், தற்போதைய திருமலை நிலவரம், என்று அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். 

இதனால், இந்த செயலி வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் பக்தர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான ஐடி நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த செல்போன் செயலி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது என்று பக்தர்கள் தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs peoples download tirupati devasthanam mobile app


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->