கர்நாடக தேர்தலில் ஜெயிக்க போவது யார்? - கணித்துக் கூறும் ஜோசியருக்கு அடித்த ஜாக்பாட்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக தேர்தலில் ஜெயிக்க போவது யார்? - கணித்துக் கூறும் ஜோசியருக்கு அடித்த ஜாக்பாட்.!

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பினைது முதல் தேர்தல் நடத்தை விதிகளும், இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலும் நடைபெற்று இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. 

அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடத்தி வந்தனர். இந்தப் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் ஆட்சியில் அமர போவது குறித்த கருது கணிப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரைச் சேர்ந்த நரேந்திர நாயக் என்ற ஒரு மருத்துவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கும்? அரசியல் காட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? எத்தனை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்படுவர்? என்பது உள்ளிட்ட சுமார் 20 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், இந்தக் கேள்விகளை சரியாகக் கணித்துக் கூறும் ஜோதிடர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றுதெரிவித்துள்ளார். நரேந்திர நாயக் 1991 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற சவால்களை விடுத்து வருவது குறிபிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten lakhs prize astrologer for correctly predicts of karnataga election win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->