ராஜஸ்தானில் அதி பயங்கரமாக விபத்து!...6 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!...ஓட்டுநருக்கு வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சூரத்கர்-அனுப்கர் நெடுஞ்சாலையில்  கார் ஒன்று ஓட்டுனரின்  கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்கள்  மீது அதிபயங்கரமாக மோதியது.

 இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து  இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேரை மீட்ட போலீசார், அவர்களை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், தாராசந்த் , சுனில் குமார், ராகுல்,  பல்ராம், மணீஷ், சுப்கரன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible accident in Rajasthan The death toll has risen to 6 the driver has been caught


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->