தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!....பணியில் இருந்த 6 பேர் பரிதாமாக உரியிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தொழிற்பேட்டையில் மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை  அடுத்து எரிவாயு சிலிண்டர் வெடித்து தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தின் போது தொழிற்சாலைக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கினர். பின்னர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். மேலும்  3 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible fire accident in the factory 6 people who were on the job were tragically lost


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->