மத்திய ஆப்ரிக்கா நாட்டில் படகில் பயங்கர தீ விபத்து... 50 பேர் பலி..!
terrible fire boat Central African country 50 people died
மத்திய ஆப்ரிக்கா நாட்டில், காங்கோவில் வடமேற்கு பகுதியில் மடான் குமு என்கிற துறைமுகம் ஒன்றுள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இதில் பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது படகில் தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மேலும் மோட்டார் படகில் பயணம் செய்தவர்கள் இந்த திடீர் தீ விபத்திலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்துள்ளனர்.
அதன் பிறகு மோட்டார் படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த திடீர் விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் 100-க்கும் மேற்பட்டவர்களை லேசான காயத்துடன் மீட்டனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்துபெற்று வருகிறது.
இந்த திடீர் விபத்து காரணம் ஆராய்ந்ததில், படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
English Summary
terrible fire boat Central African country 50 people died