முறிந்தது இண்டியா கூட்டணி! அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி கட்சியினர்! அரியானாவில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!
The Aam Aadmi Party is in a separate race after the Congress party in the Ariana Assembly elections
நடைபெற உள்ள அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நடைபெற உள்ள அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது.
காங்கிரசை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் சிங் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் ஆகியோர் முடிவு செய்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையானது 46 இடங்கள். இந்த நிலையில் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது. கடைசியாக நடந்து முடிந்த 2019 ஆம் சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. ஜேஜேபி கட்சி 10 இடங்களை வென்றது.
யாருக்கும் அந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜேஜேபி கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை அமைத்தது. இந்தநிலையில் அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் தனித்தனியாக களம் இறங்க உள்ளது.
பாஜகவில் ஆதரவை முறித்துக் கொண்ட ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தராமல் கடந்த தேர்தலை போல தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியே உள்ளது. இதனால் அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
English Summary
The Aam Aadmi Party is in a separate race after the Congress party in the Ariana Assembly elections