ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்; கங்கை நதியின் அதிசயிக்க வைக்கும் புனித தன்மை..! - Seithipunal
Seithipunal


கங்கை நதி, இந்தியாவின் மிக புனிதமான நதிகளில் ஒன்று. இது கலாசார மற்றும் ஆன்மிக மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கங்கையின் சிறப்பு என்னவென்றால், அதன் தன்னைத் தானே சுத்தப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த கங்கை நதி பிற நன்னீர் நதிகளை விட 50 மடங்கு வேகமாக கிருமிகள் மற்றும் மாசுபடுத்திகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நீரியல் நிபுணர் அஜய் சோன்கர் கூறியுள்ளார்.
மஹாகும்பத்தின் போது 60 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிய இருந்தபோதிலும், கங்கை முற்றிலும் கிருமிகள் இல்லாமல் உள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புற்றுநோய், மரபணு குறியீடு, செல் உயிரியல் மற்றும் ஆட்டோபேஜி ஆகியவற்றில் உலகளாவிய ஆராய்ச்சியாளரான டாக்டர் அஜய் சோன்கர், வாகனிங்கன் பல்கலை, ரைஸ் பல்கலை, டோக்கியோ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி போன்ற முன்னணி நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றியவர்.

இது குறித்து நீரியல் நிபுணர் டாக்டர் அஜய் சோன்கர் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

நன்னீர் நதியான கங்கையில், 1,100 வகையான இயற்கையான பாக்டீரியா கொல்லிகள் (பாக்டீரியோபேஜ்) இருக்கின்றன. அவை, இயற்கையாகவே மாசுபாட்டை நீக்கி, அவற்றின் எண்ணிக்கையை விட 50 மடங்கு அதிகமான கிருமிகளைக் கொன்று, அவற்றின் ஆர்.என்.ஏ.,வை மாற்றுவதன் மூலம் தண்ணீரை சுத்திகரிக்கின்றன. இவை வேறு எந்த ஒரு நன்னீர் நதிக்கும் இல்லாத சிறப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கங்கையின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் இந்த பாக்டீரியா கொல்லிகள் உடனுக்குடன் நதியை சுத்திகரிக்கின்றன என்றும் இவரின் ஆய்வு குழு தெரிவித்துள்ளது. கங்கையினுள் உள்ள பாக்டீரியா கொல்லிகளின் சிறப்பு என்னவென்றால், அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை மட்டுமே அழிக்கின்றன. அவற்றின் செயல்முறை, கடல் நீரை சுத்திகரிக்கும் கடல் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

இது தான் கங்கை நதியின் துாய்மைக்கு காரணம் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவாறு கங்கை நதியில் காணப்படும் பாக்டீரியா கொல்லிகளின் திறன், நதி நீர் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The amazing holiness of the Ganges River


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->