எதாவது பிரச்சினை நேரத்துல கன்னி ராசிக்காரர்களிடம் பேசினால் என்ன ஆகும் தெரியுமா?
Common characteristics of Virgos
12 ராசிகளில் 06 வது ராசி கன்னியாகும். ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியில் பிறந்தவர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
அதாவது, புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்க கூடியவர்கள் நீங்கள்.

இந்த ராசிக்காரர்கள் பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள். பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே மனதார விரும்புவீர்கள். நீங்கள் தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள்.
உங்களின் 02-ஆம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசக்கூடியவர்கள். நீங்கள் மற்றவர்களிடம் பேசும் ஆறுதலான சில வார்த்தைகள்அவர்களின் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

11-ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதி. உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உங்களுக்கு உடலுழைப்பு என்பது குறைவாக இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார்கள்.
கோபம் வந்தால் கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் நீங்கள் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.

உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற இன்னல்கள், இடையூறுகள் நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு. உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார்.
உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசித்தால் நல்லது. இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
English Summary
Common characteristics of Virgos