கொல்கத்தா - சென்னை எக்ஸ்பிரஸ் இரயில் தடம் புரண்டு விபத்து!
Kolkata chennai express train accident
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி பயணித்த விரைவு ரயில் ஒடிசா அருகே தடம்புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே இயங்கும் ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ், சபிரா ரயில் நிலையம் அருகே இன்று மாலை திடீரென தடம்புரண்டது.
இந்த விபத்து, ரயில் தண்டவாளத்திற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில் ரயிலில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானனர். இருப்பினும், இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்தார்.
விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்காலிகமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Kolkata chennai express train accident