மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு, வரும் 16-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!
The case against the Prohibition of Religious Conversion Act will be heard in the Supreme Court on the 16th
மத மாற்றங்கள் தொடர்பான வழக்குகளின் மனு எதிர்வரும் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் உள்ள மதமாற்றத் தடைச் சட்டங்களை சில மனுக்கள் எதிர்த்துள்ளன. இந்நிலையில், கட்டாய மத மாற்றத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அச்சுறுத்தல், மிரட்டல், பணம், பரிசு அளித்து ஆசைவார்த்தை காட்டுதல் போன்றவை மூலம் மதமாற்றம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த விசாரணையின் போது, மதமாற்றம் ஒரு தீவிர பிரச்சினை என்றும், அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியின் உதவியை கோரியது.
இந்நிலையில், நிலுவையில் உள்ள இம்மனுக்கள் வரும் 16-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. இதனை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The case against the Prohibition of Religious Conversion Act will be heard in the Supreme Court on the 16th