தமிழகத்தின் கபசுர குடிநீரை இந்தியா முழுவதும் விநியோகிக்க மத்திய அரசு பரிசீலனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கபசுர குடிநீர் சூரணத்தை இந்தியா முழுவதும் விநியோகிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொடிய வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையான ஊரடங்கை கடைபிடித்தன.

மேலும் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டும் நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழகத்தில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் கொரோனா தடுப்பு மருந்தாக வழங்கப்பட்டது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இதையடுத்து 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனா நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபின் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்பொழுது உருமாறிய பி.எப்.-7 என்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

இதில் இந்தியாவிலும் 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவாமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து காய்ச்சல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கொரோனா காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட சித்த மருத்துவ மருந்தான கபசுர குடிநீரை தமிழகத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதில், அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இந்த கபசுர குடிநீர் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்பதால் தமிழக அரசின் 'டாம்கால்' நிறுவனம் கபசுர குடிநீர் சூரண பொடியை அதிக அளவு தயாரித்து அனைத்து ஊர்களுக்கும் அனுப்பி வந்தது.

இந்நிலையில் இந்த கபசுர குடிநீர் பொடியை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இந்தியா முழுவதும் விநியோகிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்காக கபசுர குடிநீர் பவுடரை வாங்குவதற்கு தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறது. 

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரி கூறுகையில், கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்க சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், ஆடாதொடா இலை, கற்பூரவல்லி இலை, நில வேம்பு, கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் உள்ளிட்ட 15 மூலிகைகள் இடம் பயன்படுத்தப்படுவதால் இந்த சூரணத்தை கொதிக்க வைத்து குடிக்கும்போது பக்க விளைவு ஏற்படுவதில்லை என்று தெரிவித்தார். 

மேலும் கொரோனா முதல் அலையின் போது தமிழகத்தில் இது 3 லட்சம் கிலோ அளவிற்கு மக்கள் சிறப்பாக பயன்படுத்தியுள்ளர். இதனால் இந்த சூரணத்தை 100 கிராம் பாக்கெட்டுகளாக இந்தியா முழுவதும் வழங்க முடியுமா? என்று தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்க அரசின் டாம்கால் நிறுவனத்தின் கபசுர குடிநீர் சூரணம் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே இயங்கி வருகிறது. இங்கு வழக்கத்தை விட தற்போது அதிக அளவுக்கு சூரணம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The central government is considering distributing kapasura drinking water from Tamil Nadu across India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->