கேரளா ரெயிலில் தீ வைத்த குற்றவாளிக்கு மனநல பாதிப்பு இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் எலத்தூர் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. 

இதனையடுத்து ஷாருக் சைஃபியை 4 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. இதில் ஷாருக் சைஃபியின் உடல் மற்றும் மனநலம் விரிவாக ஆராயப்பட்டதில், அவருக்கு மனநல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர் விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஷாருக் சைஃபி விய்யூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The culprit who set fire to the Kerala train is not mentally ill medical examination results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->