மது போதையில் தகராறு: தொழிலாளியை கல்லால் அடித்துக் கொன்ற நண்பர்கள்.! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கல்லால் அடித்து நண்பர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கவுரிபுரா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராமகிருஷ்ணா (30). இவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அனைவரும் மது போதையில் இருந்தபோது, ராமகிருஷ்ணாவிற்கும், அவரது நண்பர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள், ராமகிருஷ்ணாவை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் ராமகிருஷ்ணாவை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராமகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் மது போதையில் முன்விரோதம் காரணமாக நண்பர்கள் ராமகிருஷ்ணாவை கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ராமகிருஷ்ணாவை கொலை செய்த நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The friends who stoned the worker to death in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->