''தமிழ்நாட்டில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது; எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை''; தர்மேந்திர பிரதான்..! - Seithipunal
Seithipunal


தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரிய தர்மேந்திர பிரதான், பேசியதை வாபஸ் பெற்றுக் கொண்டார். 

இந்நிலையில், ''தமிழகத்தில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டது,'' என ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இன்று ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது: ''திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச்செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது'' எனக்கூறியுள்ளார்.

அத்துடன், ''மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963-இல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, ''உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 05-ஆம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ''தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. தி.மு.க., எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்டு தயார்.'' என அவே மேலும் மன்னிப்பும் கோரியுள்ளார்.  

அடுத்ததாக அவர் பேசு போது, ''ஆந்திராவில் 10 மொழிகளை கற்பிக்கத் தயார் என சந்திரபாபு கூறியுள்ளார். எங்களுக்கு இரு மொழியே போதும் எனக்கூறுபவர்களின் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டனர்.'' எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவே பேசுகையில், ''தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை எப்படி நடத்தினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள 1500 சிறுபான்மையின பள்ளிகளில் 900 பள்ளிகளில் மும்மொழி கற்றுத்தரப்படுகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் மும்மொளிகளில் ஒன்றாக கற்பிக்கப்படுகிறது. நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிய போது ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது தான் புதிய தமிழகம்.'' என அவர் இன்றைய லோக்சபா கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ''ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என எங்கேயும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவின் வரலாற்றை பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை என்ன செய்வது. தி.மு.க.,வினர் தனி உலகில் வாழலாம். ஆனால், அதுதான் உண்மை. என்னை நீங்கள் முட்டாள் எனக்கூற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை அவர்கள் தொடரட்டும். என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The number of Tamil learners in Tamil Nadu has decreased Says Dharmendra Pradhan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->