திருடச்சென்ற வீட்டில்.. காதலை வெளிப்படுத்திய கொள்ளையர்கள்.! - Seithipunal
Seithipunal


திருடச்சென்ற வீட்டில் கொள்ளையர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

கோவா மாநிலம் மர்கோவாவில் ஆசிப் ஜெக் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பதை அறிந்தார். மேலும் வீட்டில் இருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி ஆபரணங்களும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் டிவி திரையில் ஐ லவ் யூ என்று கொள்ளையர்கள் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருந்தனர்.

இதுகுறித்து மர்கோவா போலீசார் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர். அதிக அளவில் பணம் நகை கிடைத்த மகிழ்ச்சியில் கொள்ளையர்கள் ஐ லவ் யூ என்று எழுதி வைத்து சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி வீடியோ மூலம் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The robbers expressed their love in the stolen house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->