மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்... போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கெங்கேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் திவாகர். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் மனைவி அவரது தாய் எலல் அரசி(48) வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று மாமியார் வீட்டிற்கு சென்ற திவாகர், அங்கிருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து வீட்டில் குழந்தை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த திவாகரின் மனைவி மற்றும் மாமியார் எலல் அரசி பல இடங்களில் தேடினர். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், குழந்தையை திவாகர் தூக்கி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திவாகரை தொடர்பு கொண்டு குழந்தையை கொண்டு வந்து விடுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு திவாகர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு வந்த திவாகர் மாமியாருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இருவருடைய வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த திவாகர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக எலல் அரசி உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த எலல் அரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தலைமறைவான மருமகன் திவாகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The son in law who murder his mother in law in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->