சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய 'நாட்டு நாட்டு' பாடல்.!!
The song Nattu Nathu won the Oscar award for Best Song
சிறந்த பாடலுக்கான 95வது ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் 'நாட்டு நாட்டு' பாடல்.
பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் மார்ச் 25-ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடியை வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வானது.
இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்று சாதனை படைத்துள்ளது.
English Summary
The song Nattu Nathu won the Oscar award for Best Song