மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின  தொடர்பான விவகாரத்தில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்களுக்கிடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். 16 மாதங்களாகியும் மணிப்பூரில் தாக்குதல் இன்னும் ஓயவில்லை தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது.

இந்த சூழலில் ராக்கெட் டிரோன் மற்றும்  நவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டனர் , 12 பேர் காயம் அடைந்தனர். மேலும் அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

ராக்கெட் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மாநிலத்தில் உடனடியாக தாக்குதலை நிறுத்திவிட்டு அமைதியை மீட்டெடுக்க வேண்டி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் இந்த சூழலை கட்டுப்படுத்த மத்திய அரசு தெலுங்கானா, ஜார்கண்ட்டில் இருந்து 2,000 சி.ஆர்.பி.எப். வீரர்களை சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The students protest in Manipur is intense


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->