இந்தியாவில் உடனடி விவாகரத்து... உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படும் போது அவர்கள் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்றாலும் விவாகரத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருந்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி விவாகரத்து என்பது  மத அடிப்படை சட்டங்களின் அடிப்படையில் அரசியலமைப்பு சாசனத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்து மதச் சட்டங்களின்படி விவாகரத்திற்கு விண்ணப்பித்த தம்பதியினருக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். தற்போது இதனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்  மனம் ஒத்து  விவாகரத்திற்கு  தம்பதிகள் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு உடனடியாக விவாகரத்து வழங்க செய்யும்படி  உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சரி செய்ய முடியாத பிரிவுகளில் இருவரும் விவாகரத்திற்கு முழு சம்மதம் தெரிவித்தால்  உடனடியாக விவாகரத்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இந்தத் தீர்ப்பு  ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Supreme Court gave a swift verdict on instant divorce in India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->