மதுப்பிரியர்களால் போலீசாருக்கு வந்த சோதனை! திக்கு முக்காய் திணறிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், அதனை அழிக்க முயன்ற போது மதுப்பிரியர்கள் முந்தியடித்து கொண்டு தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது பல வாகனங்களில் சோதனை செய்தனர். பின்னர் சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கடத்தியதை போலீசார் கண்டுபிடித்ததை தொடர்ந்து, அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

 

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை JCB இயந்திரம் மூலம் போலீசார் அழிக்க முயன்றனர். அப்போது அந்த இடத்திற்கு முந்தியடித்து கொண்டு வந்த மதுபிரியர்கள் மதுபாட்டில்களை தூக்கிச் சென்றனர். 

 

அப்போது மதுபிரியர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The test came to the police by alcoholics The police are overwhelmed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->