நாட்டில் புற்று நோய், நீரிழிவு நோய், ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் விலை உயரும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


நாட்டில் புற்று நோய், நீரிழிவு நோய், இதயக் கோளாறு போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் போன்றவற்றுக்கு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் விலை, 1.7 சதவீதம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இதற்கான மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருந்து நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட விலை உயர்வை மீறி மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளை தொடர்ந்தும் மீறுவதை, மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 06-ஆம் தேதி நிலவரப்படி, 307 மருந்துகளின் விலை உயர்வில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஆவணப்படுத்தியுள்ளது. இது குறித்து, வேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கான அகில இந்திய அமைப்பின் பொதுச்செயலர் ராஜிவ் சிங்கல் கூறியதாவது:

மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் இதர செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த விலை உயர்வு, மருந்து விற்பனை தொழிலுக்கு நிம்மதி அளித்துள்ளது. சந்தையில், 90 நாட்களுக்கு தேவையான மருந்துகளின் கையிருப்பு இருக்கிறது. இதனால், குறித்த விலை உயர்வு அமலுக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களாகும் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

There is a risk that the price of cancer drugs will increase in the country


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->