இந்திய-சீனா எல்லையில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமூகநிலை ஏற்படாது.! அமைச்சர் ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான மாநாடு கோவா தலைநகர் பனாஜியில் மே 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கெய் லவ்ரவ், சீன வெளியுறவு துறை அமைச்சர் கின் கேங் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஷாங்காய் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதித்தார். இதையடுத்து மாநாட்டில் பேசிய சீன அமைச்சர் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் சமூகநிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநாட்டிற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-சீனா உறவுகள் இயல்பான நிலையில் இல்லை எனவும், எல்லையில் இருக்கும் அசாதாரண நிலை நீங்க வேண்டும் எனவும், லடாக் பிரிவில் அசல் எல்லை கோட்டு பகுதியிலிருந்து இந்தியா மற்றும் சீனா படைகளை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சீனா தனது படைகளை திரும்ப பெறவில்லை என்றால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இயல்பாக இருக்காது என்பதை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் என செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no peace between India and China until abnormal situation in border removed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->