ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம்..தொழிலாளியின் விரல் என தகவல்! - Seithipunal
Seithipunal


மும்பை : ஆன்லைனில் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆர்டர் செய்து இருந்தார். ஐஸ்கிரீமை சாப்பிட தொடங்கியது அதில் மனித விரலல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்தது. அந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலைக்கு சீல் வைத்து உரிமையை ரத்து செய்தனர்.

பின்னர் ஐஸ் கிரீமில் இருந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி மர்மமாகவே இருந்துவந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

ஐஸ்கிரீம் கம்பனியில் பணிபுரிந்து வந்த ஓம்கர் என்பதின் விரல்தான் அது என்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரிவந்துள்ளது. ஐஸ் கிரீம் தயாரித்துக் கொண்டிருந்தபோது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There was a human finger in the ice cream


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->