திருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? தேவஸ்தான அதிகாரி வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொத்து மதிப்பு குறித்த தகவலை தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் சர்வதேச கோவில்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 30 நாடுகளை சேர்ந்த இந்து கோவில்களில் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி பேசியதாவது, திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் 71 கோவில்கள், 11 அறக்கட்டளைகள், 14 மருத்துவமனைகள், 35 கல்வி நிறுவனங்கள், 9 வேத பள்ளிகள், 4 கோசாலைகள், 300 திருமண மண்டபங்கள், 10 தொண்டு நிறுவனங்கள், 4 மொழிகளில் வெங்கடாஜலபதி பக்தி தொலைக்காட்சிகள், ஆதரவற்றோருக்கான பால மந்திரம் மற்றும் தேவஸ்தானத்தின் கீழ் 2 அருங்காட்சியங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக ரூ.17,000 கோடி ரொக்க பணம், 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரமோற்சவம் போன்ற முக்கிய உச்சவங்களின் போது சுவாமிக்கு அலங்காரம் செய்ய 1200 கிலோ தங்க நகைகளும், 10,000 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi Elumalaiyan temple assets value


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->