7 மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா.? - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கணக்கில்லாமல் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

இதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும், நினைத்த காரியங்கள் நிறைவேறியதற்கும் அதிக அளவில் காணிக்கை அளித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஏழு மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் உண்டியல் கணிக்கையாக ரூ.827 கோடி காணிக்கையாக கொடுத்துள்ளனர். 

அதன்படி கடந்த ஜனவரியில் ரூ.123 .7 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.114.12 கோடியும், மே மாதத்தில் ரூ.109.99 கோடியும், ஜூனில் ரூ.116.14 கோடியும், ஜூலை மாதம் ரூ.129 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi Elumalaiyan temple Last 7 month undiyal kaanikkai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->