பக்தர்கள் கவனத்திற்கு.. திருப்பதி ஏழுமலையான் கோவில்.. நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு.!
Thirupathi Elumalaiyan temple november Month dharshan ticket
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.
இதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை, அங்கப்பிரதட்சணம், சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் டிக்கெட் 21-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 22-ந் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். வர்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் 22ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். மேலும், 24ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thirupathi Elumalaiyan temple november Month dharshan ticket