திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிப்பு.!
Thiruppathi eezhumalaiyaan temple Arjitha sevai ticket from tomorrow
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், உலக பிரசித்தி பெற்ற இந்தியாவில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே நடைபெறும் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும்.
மேலும், மே மாதத்திற்கான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை போன்ற ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்களும் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
English Summary
Thiruppathi eezhumalaiyaan temple Arjitha sevai ticket from tomorrow