புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ உள்ள செங்கோல் - மோடியிடம் ஒப்படைத்த திருவாடுதுறை ஆதீனம்.!!
thiruvaduthurai adheenam handover Scepter to modi
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ உள்ள செங்கோல் - மோடியிடம் ஒப்படைத்த திவாடுதுறை ஆதீனம்.!!
தற்போதுள்ள நாடாளுமன்றம் நூறு ஆண்டுகள் பழமையானது என்பதாலும், போதிய இடவசதி இல்லை என்பதாலும் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி அடிக்கல் நாட்டினார்.
டாடா ப்ரொஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் கட்டி வரும் இந்த நாடாளுமன்றம் 'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் கட்டுமானத்திற்காக சுமார் 1200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ள செங்கோலை திருவாடுதுறை ஆதினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
English Summary
thiruvaduthurai adheenam handover Scepter to modi