ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்த முடியாது - எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு தகவல்.!!!
sj surya say no acting in villan role
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரானவர் எஸ்.ஜே.சூர்யா. 'சூர்யாவின் சனிக்கிழமை', கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், சமீபத்தில் வெளியான விக்ரமின் "வீரதீர சூரன்" என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது எஸ்.ஜே.சூர்யா பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி', கார்த்தியுடன் 'சர்தார் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 'கில்லர்' என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-
'நான் நடிகனாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் காலம் வந்துவிட்டது. ரொம்ப நாளைக்கு வில்லனாகவே சுத்திக்கொண்டு இருக்க முடியாது. அதற்காக நான் வரவில்லை. 'கில்லர்' என்கிற படத்தை இயக்கி நடிக்க போகிறேன். என்னுடைய இயக்கத்தை பார்க்க ஆசைப்படுகிறவர்களுக்கு கண்டிப்பாக அது பிடிக்கும்' என்றுத் தெரிவித்தார்.
English Summary
sj surya say no acting in villan role