டெல்லி மதுபான கொள்கை வழக்கு - கவிதாவிற்கு மேலும் 3 நாட்கள் காவல்.!
three days extened to kavitha of enforcement custody
டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்குத் தொடர்பாக டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும் தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவின் மகளான கவிதாவை, கடந்த 15-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைத்து அமலாக்கத்தஉறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கு எதிராக கவிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதற்கு முன்னதாக அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக கவிதாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி மனுதாக்கல் செய்தது. ஆனால், 7 நாட்கள் மட்டும் அனுமதி அளித்த நீதிமன்றம், மார்ச் 23- ம் தேதி கவிதாவை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது.
அதன் படி கவிதா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை கவிதாவிடம் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கும்படி இன்று மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 3 நாட்கள் கவிதாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
English Summary
three days extened to kavitha of enforcement custody