உபி: பிறந்து 14 நட்களே ஆன குழந்தை... வயிற்றில் 3 கரு... ஆச்சரியத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலத்தில் பிறந்து 14 நாட்களாக குழந்தையின் வயிற்றிலிருந்த மூன்று கருக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள சர் சுந்தர்லால் மருத்துவமனையில்  பிறந்து 14  நாட்களேயான குழந்தைக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பிறந்த போது 3.3  கிலோ எடையாக இருந்த அந்த குழந்தை  சுவாசக் கோளாறு மற்றும் உடல் வீக்கம் ஆகியவற்றல் அவதிப்பட்டு வந்தது.

இந்நிலையில் குழந்தையை சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள்  குழந்தையின் வயிற்றில் மூன்று கரு இருப்பதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அவற்றை  நீக்க முடிவு செய்தனர். 

இதன் அடிப்படையில் மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையின் மூலம்  குழந்தையின் வயிற்றில் இருந்த கரு அகற்றப்பட்டது. இது போன்ற குறைபாடுகள் 5 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் போது இன்னொரு கரு குழந்தையின் வயிற்றுக்குள் சென்று விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three fetuses were surgically removed from the stomach of a 14 day old baby in shock in the state of Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->