விவசாயிகள் போராட்டம் - போலீசார் தாக்குதலில் 3 விவசாயிகள் உயிரிழப்பு.!
three formers died for police attack
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுப்புகள் அமைத்தனர். இருப்பினும் விவசாயிகள் தடுப்புகள் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றனர். இதனால், போலீசார் அவர்களைத் தடுக்க கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.
இதையடுத்து கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை ஐந்து கட்டமாக பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், நேற்று பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. அதில் 3 விவசாயிகள் படுகாயமடைந்தனர்.
உடனே அவர்கள் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சுப்கரன் சிங் என்ற, 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார். இதைத் தெடர்ந்து மற்ற இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். விவசாயிகள் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 நாட்கள் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
three formers died for police attack