இன்று முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா , பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் உள்ளிட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தப் புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இந்த சட்டங்களுக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு அரசிதழில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில், ஜூலை ஒன்று முதல் இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும் என்றுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை முதல் நாளான இன்று முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வருகின்றன. இதனை முன்னிட்டு புதிய சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் மற்றும் சுமாா் 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளித்து தயாா்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three new criminal laws force from today


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->