பரபரப்புக்கு மத்தியில் மக்களவை ஒத்திவைப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார். இவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். 

இந்த உரையில், பிரதமர் மோடி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். அத்துடன், சிவபெருமான், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகிய கடவுள்களின் படங்களை அவையில் காட்டி பேசினார். இதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆவேசமாக பதில் அளித்ததால், விவாதத்தில் சூடு பிடித்தது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இந்த உரையில், மக்களவைத் தேர்தல் வெற்றி, ராகுல் காந்தியின் பேச்சு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார். 

இதன் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே முதல் அமர்வு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lokshaba meeting postpond untill date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->